இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்

இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக கடலோர நீர்வாழ் உயிரின விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-16 18:44 GMT

சீர்காழி:

இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக கடலோர நீர்வாழ் உயிரின விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில அளவிலான கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தமிழக கடலோர நீர் வாழ் உயிரின விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக மாநில அளவிலான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அலி உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் புதுச்சேரி பாலா, நிர்வாகிகள் சங்கர் பிள்ளை, கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் அலி உசேன் சங்க வளர்ச்சி குறித்து பேசினார்.கூட்டத்தில் நிர்வாகிகள் சிவா, பேராசிரியர் ஜெயராமன், வெங்கடகிருஷ்ணன், சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் நன்றி கூறினார். கூட்டத்தில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மானிய விலையில் மின்சாரம்

இறால் விவசாயத்தை கடலோர உயிரின வளர்ப்பு ஆணையமும், மத்திய மாநில அரசுகளின் மீன்வளத் துறைகளும் இறால் வளர்ப்புகளை விவசாயம் சார்ந்த தொழிலாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.ஆந்திர மாநிலத்தில் இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவது போல் தமிழக அரசும் இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்