பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூச்சி, நோய் மேலாண்மை செயல் விளக்கம்

Update: 2022-12-15 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் சாமியாபுரம் கிராமத்தில் அளிக்கப்பட்டது. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், உதவி பொறியாளர் சாணக்கியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, காய்கறி பயிர்களில் பூச்சிகள் தாக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பூச்சி, நோய் தாக்கினால் அதனை எப்படி சரிசெய்வது? என்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை மூலம் விளக்கம் அளித்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்