சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு நடத்தினர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை சுற்றிவலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் ேகாவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் ெசய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.