சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-11-21 19:24 GMT

பெரம்பலூர்:

கார்த்திகை மாத முதல் பிரதோஷத்தின் முதல் சோமவார திங்கட்கிழமையான நேற்று வந்தது. இதனால் சிவன் கோவில்களில் நேற்று கார்த்திகை சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் உள்ள அபராத ரட்சகர் (குற்றம் பொருத்தவர்) உடனுறை சுகுந்த குந்தலாம்பிகை கோவிலில் நேற்று கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்