சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது

Update: 2023-08-28 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமையான கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், நெய் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கமலாம்பிகா சமேத கைலாசநாதர், உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர்.

இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்