புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-08-25 17:16 GMT

திருப்புவனம்,

திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட இக்கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாடப்பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இங்கு ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷத்தையொட்டி கோவிலின் கொடிமரம் அருகே உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி-அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்னர் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்