பிரதோஷ சிறப்பு வழிபாடு

பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-11-21 19:00 GMT

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் கைலாசநாதர் மலைக் கோவில் உள்ளது. இங்கு பிரதோஷத்தையொட்டி நேற்று, நந்திகேஸ்வரர், கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சிவன், நந்திகேஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்