பிரதோஷ சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சோமவார பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதைெயாட்டி சிவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் நந்தீஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் போடி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.