பிரதோஷ சிறப்பு பூஜை

போடி மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் விபூதி அலங்காரத்தில் சிவ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோவில், பரமசிவன் மலைக்கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் உள்ள பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக் கோவில், பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்