விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷ விழா

விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

Update: 2022-08-25 12:31 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வருக்கும், மூலவர் சொக்கநாதருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக நந்திகேஸ்வரருக்கு எண்ணெய் காப்பு சாற்றி திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சொக்கநாதருக்கும் 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கும், மூலவர் சொக்கநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்தியான சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்பாளும் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்