செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

Update: 2022-08-10 14:31 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் பிரதோஷ விழா நடந்தது. விழாவை யொட்டி மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பூவனநாத சுவாமி மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப் பட்டது. சாமி சன்னதி முன்புள்ள நந்தியம் பெருமாளுக்கு மார்கெட் வியாபாரிகள் சார்பில் காய்கறிகள் மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் கோவில் அறங்காவலர் திருப்பதி ராஜா மற்றும் ஆயிரக் கணக்கான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்