மத்தூர்:
மத்தூர் கிளை நூலகத்தில் அதியமான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ் துறை 2-ம் ஆண்டு மாணவிகளுக்கு நூலகம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது. இதையடுத்து நூலகத்தின் தோற்றம், நூலகத்தின் பாதுகாப்பு, நூல்கள் வாய்ப்பாடு, நூலகங்களில் உறுப்பினராக சேர்த்தல், நீக்குதல், கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், ஓலைச்சுவடிகள், நடமாடும் நூலகங்கள், நூலகங்களின் வகைகள் என்ற நூலக செயல்பாடுகள் விழிப்புணர்வுகளை நூலகர் முருகேசன் பயிற்சி அளித்தார். பயிற்சியின்போது கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், சவீதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு போட்டித்தேர்வுகளில் சவால்களை எதிர்கொள்ள நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து கூறினர். ஏற்பாடுகளை மத்தூர் கிளை நூலகர் முருகேசன் ஏற்பாடு செய்திருந்தார்.