மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி
மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.