முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு தையல், எம்பிராய்டரி பயிற்சி

Update: 2023-06-14 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குனர் வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு, 2023-24-ம் ஆண்டிற்கான தையல் பயிற்சி மற்றும் எம்பிராய்டரிக்கான பயிற்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறையின் வழியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர, முன்னாள் படைவீரர்கள் (18 வயது முதல் 40 வயதிற்குட்டவர்கள் மட்டும்), முன்னாள் படைவீரர் மற்றும் படைவீரரின் மனைவி மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மட்டும் (18 வயது முதல் 40 வயதக்குட்பட்டவர்கள் மட்டும்) தகுதியானவர்கள் ஆவர். இப்பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி, ஆதார் அட்டை நகல்-2, வங்கி கணக்கு புத்தக நகல்-2, பாஸ்போர்ட் அளவு 2 புைகப்படங்கள், படைப்பணிச்சான்று நகல்-2, மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்