தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Update: 2023-05-13 18:45 GMT


மத்திய அரசு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக 272 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது. அதில் ராமநாதபுரமும் ஒன்று. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழு சார்பில் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே ஹான்ஸ், சிகரெட் போன்ற போதைப்பொருள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 85 தன்னார்வலர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி, கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் மீரா ஆகியோர் பயிற்சி அளித்துள்ளனர். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்