வளைய பந்து சிறப்பு பயிற்சி முகாம்

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வளைய பந்து சிறப்பு பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது.

Update: 2022-09-24 18:45 GMT

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வளைய பந்து விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய வளைய பந்து கழக சட்ட ஆலோசகர் முனுசாமி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மையத்தில் வளையப்பந்து பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சி முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அக்டோபர் மாதம் 9- ந்தேதி வரை காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்