விவசாயிகளுக்கு நேனோ யூரியா குறித்து செயல் விளக்கம்

திருவண்ணாமலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நேனோ யூரியா குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-12-24 16:07 GMT

திருவண்ணாமலை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான அன்பழகன் மற்றும் வேளாண்மை அலுவலர் சோபனா ஆகியோரின் மேற்பார்வையில் நேனோ யூரியா என்ற தலைப்பின் கீழ் அரடாப்பட்டு மற்றும் மேல்கச்சிராப்பட்டு பகுதி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காணப்பிக்கப்பட்டது.

இதில் யூரியா மேலுரத்திற்கு மாற்றாக நேனோ யூரியாவை தெளிக்கலாம். 500 மில்லி லிட்டர் நேனோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவிற்கு இணையான பயனளிக்கிறது. மண் மற்றும் நீர்மாசடையாமல் சுற்று சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது போன்ற பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் விளக்கம் அளித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுகன்யா, சத்தியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்