தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
அவளூர் கிராமத்தில் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த அவளூர் கிராமத்தில் கலவை ஆதிபாரசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். ஒரு ஏக்கர் நிலத்தில் 5 பெட்டியை வைத்து தேனீ வளர்க்கலாம். பூத்தோட்டம், பழத்தோட்டம், கொல்லை புறங்களிலும் வைக்கலாம். தேனீ பெட்டியை நிழலில் வைக்க வேண்டும். சர்க்கரை பாகு உணவாக அதற்கு பயன்படுத்தலாம். ஒரு மாதத்தில் 10 கிலோ தேன் ஒரு பெட்டியில் எடுக்கலாம். தேனீ வளர்ப்பில் வருமானம் அதிகளவில் எடுக்கலாம் என அவர்கள் கூறினர். இதில் பெண் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.