தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-04 17:05 GMT

கோவில்பட்டி:

எட்டயபுரம், விஜயபுரி மற்றும் பசுவந்தனை உப மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பிதப்புரம், ரணசூர நாயக்கன்பட்டி, அம்மாமடம், சுரைக்காய்பட்டி, காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், சால்நாயக்கன்பட்டி, சிவந்திபட்டி, துறையூர் கிராம பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பசுவந்தனை, ராஜீவ் நகர், நாகம்பட்டி, சில்லாங்குளம், ஓம் சரவணபுரம், சொக்கலிங்கபுரம் கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பானு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்