முனைவென்றி கிராமத்தில் அடிக்கடி மின்தடை
முனைவென்றி கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது
இளையான்குடி அடுத்த முனைவென்றி கிராம பொதுமக்கள் மின்வாரிய கோட்ட பொறியாளரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- முனைவென்றி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சல் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பெரும்பாலான நேரங்களில் இருளில் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தங்கள் கிராமத்திற்கு தடையில்லாத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முனைவென்றி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் ஆகியோர் தனித்தனியாக தடையில்லாத மின்சாரம் வழங்க கோரி மனு கொடுத்துள்ளனர்.