மின்சாரம் நிறுத்தம்

விருதுநகர், சாத்தூர், துலுக்கப்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-16 18:13 GMT

சாத்தூர், 

விருதுநகர், சாத்தூர், துலுக்கப்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்கு ரோடு வச்சக்காரப்பட்டி, நடுவப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, இலந்தைகுளம், சங்கரலிங்கபுரம், கன்னிசேரி, இ.குமாரலிங்கபுரம், இ.முத்துலிங்காபுரம், வாடியூர், முதலிப்பட்டி, மேலச்சின்னையாபுரம், அம்மாபட்டி, ஒண்டிப்புலிநாயக்கனூர், சித்தம நாயக்கன்பட்டி, கணபதி மில் குடியிருப்புதென்பகுதி, இனாம்ரெட்டியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தம்

அதே போல விருதுநகர் மற்றும் புறநகர் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விருதுநகர் பகுதியில் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, கம்மாபட்டி சத்யமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஐ.சி.ஏ. காலனி, கல்லூரி சாலை, கால்நடை மருத்துவமனை சாலை, ஏ.ஏ.ரோடு, எப்.எப்.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, சாஸ்திரி நகர், ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, தந்தி மரத்தெரு பகுதிகளிலும், புறநகர் பகுதியில் அல்லம்பட்டி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், பாரதி நகர், ரோசல்பட்டி காந்தி நகர், ஆமத்தூர், வெள்ளூர், மத்தியசேனை, காரிசேரி, பாலவனத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

சாத்தூர்

சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சாத்தூர் மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லப்பட்டி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்துரெட்டியாபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியபட்டி, கிருஷ்ணாபுரம், கீழச்செல்லையாபுரம், கோவில்செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின்நகரம், மரக்நாதபுரம், தூங்கரெட்டியாபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சங்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்