கார் மோதி மின்வாரிய ஊழியர் சாவு

நாமக்கல்லில் கார் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-28 19:15 GMT

நாமக்கல்- திருச்சி சாலை ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் வளையப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று வளையப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

நாமக்கல் எஸ்.கே.நகர் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்