43 விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்கள்
திருப்பத்தூரில்43 விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி ரூ.78¼ லட்சம் மதிப்பிலான பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய வேளாண் எந்திரங்களை ரூ.32½ லட்சம் மானியத்தில் 43 விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜ், அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஆவின் தலைவர் ராஜேந்திரன், துணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) தீபா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.