தூத்துக்குடியில்அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில்அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-12 18:45 GMT

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் என்.டி.பி.எல். அனல்மின்நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு என்.டி.பி.எல். அனல்மின்நிலைய திட்ட செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் கடந்த 20.2.23 அன்று நடந்த சமரச தீர்வை அமல்படுத்த வேண்டும், பிரதி மாதம் 7-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும், பண்டகசாலை சாம்பல் கையாளும் பிரிவு தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து ஷிப்ட் தயாரித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை, நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும், பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்