28-ந்தேதி மின் நிறுத்தம்
தஞ்சை அருகே 28-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாரியம்மன்கோவில் மின்பாதை, ஆலங்குடி மின்பாதை, போஸ்டல்காலனி மின்பாதை ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், ஆலங்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், பை-பாஸ், சித்தர்காடு, கடகடப்பை, காந்தாவனம், எடவாக்குடி, நெல்லித்தோப்பு, அன்னை இந்திராநகர், பனங்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.