தூத்துக்குடியில் அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-30 18:45 GMT

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். மின்ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் கணபதி சுரேஷ், தமிழ்நாடு மின்சார பொறியாளர் அமைப்பு திட்ட தலைவர் ஆனந்தம், திட்ட செயலாளர் பேச்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், 1.12.2019 முதல் 16.5.2023 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பலனை வழங்க வேண்டும், பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இரட்டிப்பு ஊதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் முன்பணக்கடன் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியின் படி ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும், தூத்துக்குடி அனல் மின் நிலைய முகாம் 1 மற்றும் முகாம் 2 குடியிருப்பு பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு பஸ் வசதி கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்