மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். அரசு ஊழியர், மின்வாரிய பணியாளர் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் அமர்ந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.