மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-30 21:49 GMT

பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வில்லாபுரம் துணை மின்நிலையம்

வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே சோலைஅழகுபுரம், இந்திராநகர், ஜானகிநகர், பாரதியார்ரோடு, வீரகாளியம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் 1,2-வது தெரு, நேருத்தெரு, பெரியார் தெரு, முனியாண்டிகோவில் தெரு, காமராஜர் காலனி, ராமையா மெயின்ரொடு, ராமையா தெரு, வ.உ.சி. தெரு, சித்திவிநாயகர் தெரு, விசால பாகம் 1,2,3-வது தெரு, முத்துத்தேவர் தெரு, அண்ணா முக்கிய வீதி, நேதாஜி தெரு முழுவதும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகின்றது.

அரசரடி துணை மின்நிலையம்

அரசரடி மின்நிலையத்திற்குட்பட்ட தேனிமெயின்ரோடு, வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பி.பிச்சாவடி முடக்குசாலை டவர்லைன் தெரு ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடப்பதால் அப்பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.

அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பழனி ஆறுமுகம் நகர், சிந்தாமணி முழுவதும், கண்ணன் காலனி, வினோபாஜி நகர், மாம்பழம் ஏரியா, அனுப்பானடி சிந்தாமணி குறுக்கு ரோடு, ராஜம்மான் நகர் மெயின் ரோடு பகுதிகள் மற்றும் தியாகராஜா எடை மேடை நிலையம் வரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

கிழக்கு கோட்டம்

மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை) சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால், ஓடைப்பட்டி, ராணுவ காலனி, வீரபாஞ்சான் ரோடு, மீனாட்சி நகர், சோலைமலை கல்லூரி, பூலாம்பட்டி, திருக்காணை, அழகத்தான்பட்டி, பனைக்குளம், சித்தாக்கூர், இளங்கிப்பட்டி, மங்களபுரம், ஐஸ்வர்யாநகர், வி.என்.சிட்டி, அய்யனார்புரம், வீரபாண்டி காலனி, தவசிபுதூர், விகாஷா பள்ளி, தட்சனேந்தல், இசலானி, இடையப்பட்டி, மீனாட்சிபுரம், கூலப்பாண்டி, விரகனூர், கோழிமேடு, தொட்டியப்பட்டி, நெடுங்குளம்.

தொண்டைமான்பட்டி, எல்.கே.டி.நகர், வெளிச்சநத்தம், சத்திரப்பட்டி, காஞ்சரம்பேட்டை, சின்னப்பட்டி, முத்தமிழ்நகர், பல்லவராயன்பட்டி, நொண்டிகோவில்பட்டி, ஜோதிநகர், காமாட்சிபுரம், அனுமார்கோவில், அரசு மருத்துவமனை மேலூர், வளர்நகர், மலம்பட்டி, சந்தைபேட்டை, செக்கடி, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், வேப்படப்பு, மாணிக்கம்பட்டி, எழுகரையான்பட்டி, கோவில்பட்டி, கழுங்குப்பட்டி, சேக்கிப்பட்டி, குன்னாரம்பட்டி, தர்மசானம்பட்டி, குப்பச்சிப்பட்டி, அழகிச்சிப்பட்டி, கொட்டாணிப்பட்டி, புதுப்பட்டி, தம்பட்டலைப்பட்டி, சூரத்தூர்பட்டி, வெள்ளநாயக்கன்பட்டி, புலிமலைப்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, ஆலம்பட்டி, முத்தம்பட்டி, கம்பூர், கச்சிராயன்பட்டி, சொக்கம்பட்டி, பொட்டப்பட்டி, கரையிப்பட்டி, செமினிப்பட்டி ஆகிய பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்