விருதுநகர், மல்லாங்கிணறு, துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
விருதுநகர், மல்லாங்கிணறு, துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
விருதுநகர், மல்லாங்கிணறு, துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் மேலரதவீதி, சேக்கிழார் தெரு, பெசிதெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, மெயின் பஜார் தெற்கு பகுதி, மதுரை ரோடு, கச்சேரி ரோடு, கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், லட்சுமி காலனி, கே.ஆர்.கார்டன், கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி பகுதி, பத்திரப்பதிவு அலுவலகப் பகுதி ஆகிய பகுதிகளில் மின்மினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குமாரலிங்கபுரம், வீரச்செல்லையாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
மல்லாங்கிணறு
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வில்லிபத்திரி, வரலொட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
பெரியவள்ளிக்குளம் துணைமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ரோசல்பட்டி, குமாரபுரம், கே.கே.எஸ். எஸ்.என். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
துலுக்கப்பட்டி
துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும்பகுதிகளான வச்சக் காரப்பட்டி, பட்டம்புதூர், குப்பாம்பட்டி, மலைப்பட்டி, கூத்திப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.