விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர் புறநகர் பகுதிகளில் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆதலால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புறநகர் பகுதிகளான பாவாலி, வி.சுந்தரலிங்காபுரம், குமாரலிங்கபுரம், வீர செல்லையாபுரம், ரோஜா நகர், சிட்கோ தொழில்பேட்டை, சந்திரிகிரிபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.