ராமநாதபுரம், ரெகுநாதபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக ராமநாதபுரம், ரெகுநாதபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-02-13 18:45 GMT

பராமரிப்பு பணி காரணமாக ராமநாதபுரம், ரெகுநாதபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை மற்றும் ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே ராமநாதபுரம், சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். தாயுமானசாமி கோவில்தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், பட்டணம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரசு மருத்துவமனை சாலை, அரண்மனை, வடக்குத்தெரு, நீலகண்டி ஊருணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள்ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத்தெரு, ரோமன் சர்ச், பெரிய பஜார், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சிஊருணி, பயோனியர் மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகள்.

ரெகுநாதபுரம்

எட்டிவயல் மற்றும் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாங்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், பிச்சாவலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

கீழச்செல்வனூர்

சாயல்குடி அருகே வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், கீழக்கிடாரம், மேலக்கிடாரம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்க்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்க்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன பகுதிகள், தனியார் உப்பு நிறுவன பகுதிகள் மற்றும் இறால் பண்ணைகள் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்