பூலாம்பாடி-பாடாலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
பூலாம்பாடி-பாடாலூர் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அ.மேட்டூர், புதுக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அ.மேட்டூர் துணை மின் நிலையத்தை சார்ந்த மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பெரிய சாமி கோவில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி (கிருஷ்ணாபுரம்), ரவிகுமார் (சிறுவாச்சூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.