சிப்காட் நகர், அன்னவாசல் பகுதிகளில் நாளை மின் தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிப்காட் நகர், அன்னவாசல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்தடை
அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சிப்காட், கவிதா நகர்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவுத் மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு), ரங்கம்மாள் சத்திரம், கே.கே. நகர், வடசேரிபட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாடூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயம் பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், சிட்கோ (தஞ்சாவூர் ரோடு) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.