ஆலங்குடி, மழையூர் பகுதிகளில் நாளை மின்தடை

ஆலங்குடி, மழையூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படுகிறது.

Update: 2023-08-28 18:38 GMT

நாளை மின்தடை

ஆலங்குடி, மழையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, வெட்டன் விடுதி, அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்களம், மழையூர் கருப்படிபட்டி, மாத்தூர், தொண்டமான்விடுதி, கெண்டையம்பட்டி, துவார், ஆத்தங்க ரைவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஆலங்குடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆலங்காடு, பசுவயல்...

வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) மின் தடை ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பில் மாறுதல் செய்யப்பட்டு அதற்கு பதிலாக நாளை (புதன்கிழமை) வடகாடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வடகாடு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்