தொட்டியம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும், தொட்டியம், அரங்கூா், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூா்பட்டி, எம்.புத்தூா், ஏலூா்பட்டி, எம்.களத்தூர், மேய்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.