பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், மேட்டுப்பட்டி, தா.பேட்டை துணை மின்நிலையங்களில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், மேட்டுப்பட்டி, தா.பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-16 19:46 GMT

பராமரிப்பு பணிகள்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர் மற்றும் மேட்டுப்பட்டி, தா.பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர் மின் நிலையங்களை சார்ந்த பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, புளியஞ்சோலை, விஸ்வாம்சமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேட்டுப்பட்டி

மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தை சார்ந்த கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தா.பேட்டை

இதேபோல் தா.பேட்டை துணை மின்நிலையத்தை சார்ந்த தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்