நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்திரப்பட்டி, நத்தம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

Update: 2023-04-25 16:47 GMT

சத்திரப்பட்டி துணை மின்நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி உக்குவார்பட்டி, சத்திரப்பட்டி, பல்லாநத்தம், இடையபட்டி, காளபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதேபோல் நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பக்குடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்