விழுப்புரம்
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், கீழ்பெரும்பாக்கம், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், சாலைஅகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்டுசாலை ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.