நாளை மின்சாரம் நிறுத்தம்

சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் பகுதிகளில் நாைள மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-22 19:38 GMT

சிவகாசி, 

சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் பகுதிகளில் நாைள மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொழிற்பேட்டை

சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி, ந.சுப்பையாபுரம், சாத்தூர்ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆனையூர், ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீமாரியம்மன்நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி.காலனி, விஸ்வம்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருத்தங்கல்

அதேபோல அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம், வேலாயுதம் ரோடு, திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்துரெட்டியபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியப்பட்டி, சாத்தூர் டவுன், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி, சின்ன கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள், மேலரத வீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர் அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

துலுக்கப்பட்டி

அதேபோல வடமலை குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், பாண்டியன் நகர், முத்தால் நகரில் ஒரு பகுதி, காந்திநகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்திய சாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல துலுக்கப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துலுக்கப்பட்டி, ஆர்.ஆர். நகர், முக்கு ரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ. குமாரலிங்காபுரம், கன்னிசேரி புதூர், வாடியூர், முதலிப்பட்டி, மேல சின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலி நாயக்கனூர், இனாம் ரெட்டியபட்டி, வாய் பூட்டான் பட்டி, கணபதி மில் குடியிருப்பு தென்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்