கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.