நாளை மின்சாரம் நிறுத்தம்

சின்னாளப்பட்டி, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-07-09 16:14 GMT

காந்திகிராமம் கீழக்கோட்டை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழகம், சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதிகள், செட்டியப்பட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி, அம்பாத்துரை, சிறுமலை ஆகிய 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்