நாளை மின்சாரம் நிறுத்தம்

பந்தயதிடல் மைதானம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-09-28 20:27 GMT

 மதுரை புதூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பந்தயதிடல் மைதானம், வடக்கு மண்டல அலுவலகம், அரசு அச்சகம், எஸ்.பி.ஐ. அலுவலகம், எஸ்.பி.ஐ. குடியிருப்பு வளாகம், வனத்துறை அலுவலகம், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்