நாளை மின்சாரம் நிறுத்தம்

அய்யலூர், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-03 21:15 GMT

அய்யலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்தார்.

இதேபோல் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலராஜகாபட்டி, கதிரியன் குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுரம், பழக்கனூத்து, மில் பீடர், நரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.காத்தவராயன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்