நாளை மின்சாரம் நிறுத்தம்

ராஜபாளையம், ஆலங்குளம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-08-17 18:51 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம், ஆலங்குளம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள முடங்கியார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் தாலுகா அலுவலகம், பச்ச மடம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரெவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

ஆலங்குளம்

அதேபோல ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் ஆலங்குளம் முக்குரோடு, முத்துச்சாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கங்குளம், காக்கி வாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரிகுளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்