சாலைக்கிராமத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
சாலைக்கிராமத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி
சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலைக்கிராமம், கோட்டையூர், சூராணம், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர் ஆகிய கிராமங்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிவித்துள்ளார்.