ராம்ஜிநகர், முக்கொம்பு பகுதிகளில் இன்று மின்சார நிறுத்தம்
ராம்ஜிநகர், முக்கொம்பு பகுதிகளில் இன்று மின்சார நிறுத்தப்படுகிறது.
அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கள்ளிக்குடி மற்றும் தாயனூர் சந்தை மின்பாதையிலும், சிறுகமணி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் முக்கொம்பு மின்பாதையிலும் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி அம்மாப்பேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, சத்திரப்பட்டி, வண்ணாங்கோவில், பூங்குடி, நவலூர் குட்டப்பட்டு, சன்னாசிப்பட்டி, அரியாவூர், சோழன்நகர், கள்ளிக்குடி, ராம்ஜிநகர், புங்கனூர், கலிங்கங்காடு, நெடுமலை ஆகிய பகுதிகளிலும், சிறுகமணி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும் திருப்பராய்த்துறை, முக்கொம்பு, திண்டுக்கரை ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அசோக்குமார் (முசிறி), கா.முத்துராமன் (திருச்சி பெருநகரம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.