நெல்பேட்டை, மாட்டுத்தாவணி பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக நெல்பேட்டை, மாட்டுத்தாவணி பகுதிகளில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Update: 2022-09-16 20:53 GMT

பராமரிப்பு பணி காரணமாக நெல்பேட்டை, மாட்டுத்தாவணி பகுதிகளில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை தெற்கு கோட்டம் ஆரப்பாளையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் துணைமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஆரப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சுடுதண்ணீா் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகா்1,2-வது தெரு, ஒா்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டுதோப்பு மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, மோதிலால் மெயின் ரோடு, பாரதியாா் ரோடு முழுவதும் பொன்னகரம் பிராட்வே, நெல்பேட்டை பஸ் நிறுத்தம், காயிதேமில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல் பகுதிகள் போன்ற இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

மேலும் அண்ணா பஸ் நிலையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இஸ்மாயில் 1-வது தெரு முதல் 19-வது தெரு வரை, ஓலைப்பட்டினம் 1,2- வது தெருக்கள், ரசாயனப்பட்டறை தெரு, முனிச்சாலை மெயின் ரோடு, ஓபுளாபடித்துறை, வைகை தென்கரை ஒரு பகுதி, காீம்ஷா பள்ளிவாசல் 1 முதல் 5- வது தெரு போன்ற பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை செயற்பொறியாளா் மோகன் தொிவித்துள்ளாா்.

மாட்டுத்தாவணி

ேமலும் மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி, புதூர், மேலமடை, சர்வேயர்காலனி, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்துநகர், காந்திபுரம், சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர், வக்போர்டு காலேஜ், பி.டி. காலனி, மானகிரி, சுப்பையா காலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், 80-அடி ரோடு, வைகை காலனி, சுகுணா ஸ்டோர், அம்பிகா தியேட்டர், பூ மார்க்கெட், பழ மார்க்கெட், கே.கே. நகர் ஆர்ச், வணிக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில்தெரு, ஜம்புரோபுரம், சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, ஈ2 ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். ரோடு, ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள்.

மீனாட்சிபுரம்

சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங். ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம்பள்ளி வாசல், யானைக்கல்(ஒரு பகுதி), 50-அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1-7 தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளிப்பகுதி, அன்னை நகர், குருவிக்காரன் சாலை, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர்தெரு, கே.டி.கே.தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோவில், அண்ணா நகர் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும்.

இத்தகவலை மதுரை வடக்கு மின்சார என்ஜினீயர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்