மாங்கால் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகசள் காரணமாக மாங்கால் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
செய்யாறு
பராமரிப்பு பணிகசள் காரணமாக மாங்கால் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
செய்யாறு மின் கோட்டம் மாங்கால் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாமண்டூர் மாங்கால், மாத்தூர், சோழவரம், சுருட்டல், வடகல்பாக்கம், பாவூர், மேல்மா, வாட்சனூர், குரும்பூர், அத்தி, இளநீர்குன்றம், நெடுங்கல், தூசி, அப்துல்லாபுரம் மற்றும் செல்ல பெரும்புலிமேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.