பாலமலை, சோமூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
பாலமலை, சோமூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் வேப்பம்பாளையம், புலியூர், காணியாளம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதைகளில் மேம்பாட்டு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பவித்திரம், பாலமலை, புன்னம், சத்திரம், மூலிமங்கலம், வீரராக்கியம், சோமூர், திருமுக்கூடலூர், நெரூர் தெற்கு, மரவாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.