இன்று மின்சாரம் நிறுத்தம்
பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பழனி அருகே உள்ள தாளையூத்து துணை மின்நிலையத்தில் சார்ஜன் பீடரில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி சாமிநாதபுரம், வயலூர், புஷ்பத்தூர், பசுபதிபுதூர், மடத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.